இஸ்ரேல் உடனான உறவு முறிவு

peoplenews lka

இஸ்ரேல் உடனான உறவு முறிவு

இஸ்ரேல் இராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான மோதல் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் கூறியுள்ளது. இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினர், அப்பாவி பலஸ்தீனர்கள் என 34,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

ரஃபா நகரிலும் இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் நாட்டுடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ அறிவித்துள்ளார்.

பெகோட்டாவில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர்கள் தினவிழாவில் பங்கேற்ற ஜனாதிபதி பெட்ரோ, இனப்படுகொலை செய்யும் அரசுடனான தூதரக ரீதியிலான உறவை முறித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

காசாவில் நடைபெறும் மனித உரிமை மீறலை உலகம் வேடிக்கை பார்க்காது. அனைத்து நாடுகளும் தீவிர நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Share on

உலகம்

peoplenews lka

ஜனாதிபதியாக பதவியேற்ற விளாடிமிர் புதின்...

ரஷ்ய ஜனாதிபதியாக விளாடிமிர் புதின் ஐந்தாவது முறையாக பதவியேற்றுள்ளார்.  இவரது பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும்.. Read More

peoplenews lka

பேச்சுவார்த்தையை நிராகரித்தது இஸ்ரேல்...

காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஒக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1,200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்... Read More

peoplenews lka

“தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்”...

இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவு தனது பொருளாதாரத்துக்கு சுற்றுலா வருவாயை பெரிதும் நம்பி இருக்கிறது... Read More

peoplenews lka

தாய்வானின் நில அதிர்வு...

தாய்வானின் ஹுவாலியன் (Hualien) பகுதியில் நில அதிர்வு பதிவாகியுள்ளது... Read More